விரைவில் அரசாங்கத்துக்கு எதிராக கடுமையான நடவடிக்கை- அஸ்கிரிய பிரிவின் அனுநாயக்கர்

245 0

இந்த நாட்டின் ஜனாதிபதி, பிரதமர் உட்பட அமைச்சர்கள் ஆகியோர் இணைந்து கல்வி, கலாசாராம், சமயம் என்பவற்றை அடியோடு இல்லாதொழிப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், மகா சங்கத்தினர் எதிர்வரும் நாட்களில் கடுமையான நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் அஸ்கிரிய பிரிவின் அனுநாயக்கர் வெடருவே உபாலி தேரர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பாதுகாப்பு மற்றும் அதன் உரிமை தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்கு மகா நாயக்கர்களுக்கு மாத்திரமே உரிமையுண்டு என்பதை அரசாங்கத்தின் நிருவாகிகள் தெரிந்துகொள்ள வேண்டும்.

முன்னைய எமது மன்னர்கள் அரச நிதி மற்றும் செல்வங்களை மகா சங்கத்திற்கு தானம் செய்து வழிபட்டார்கள். மாறாக மகா சங்கத்தினரிடமிருந்து பௌத்த உரிமைகளை எப்பொழுதாயினும் பறித்துக் கொள்வதற்கு அவர்கள் முற்பட வில்லை. இதனை இந்த நாட்டின் நிருவாகிகள் நன்றாக தெரிந்துகொள்ள வேண்டும்.

இந்த நாட்டின் பௌத்த உரிமைகளை விற்பனை செய்வதற்கும் அழிப்பதற்கும் எடுக்கும் முயற்சி பிரச்சினைக்குரியது.

நாட்டின் பிரச்சினை ஞானசார தேரரின் பிரச்சினை மாத்திரமன்று. நாட்டில் கலாசார, சமய, இன ரீதியாக பல்வேறு பிரச்சினைகள் உச்சத்தை அடைந்துள்ளன. இனங்களுக்கிடையில் ஒற்றுமைக்குப் பதிலாக விரிசலை ஏற்படுத்த அரசியல் வாதிகள் செயற்பட்டு வருகின்றனர். இதனால், நாட்டுக்குள் பதற்ற நிலையொன்று ஏற்பட்டுள்ளதாகவும் தேரர் மேலும் கூறியுள்ளதாக இன்றைய தேசிய சகோதார வார இதழொன்று அறிவித்துள்ளது.

Leave a comment