கடந்த மார்ச் மாதம் கேப்பாபுலவு இராணுவ முகாமிற்கு முன்பாக கூடாரம் அமைத்து முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் போராட்டம் தீர்வின்றிய நிலையில் தொடர்கின்றது.138 குடும்பங்கள் தமக்கு சொந்தமான 482 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி இந்த தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2008 ஆம் ஆண்டு சொந்த நிலங்கிளிலிருந்து வெளியேறிய மக்கள் இதுவரை சொந்த நிலங்களில் மீள்குடியேற்றம் செய்யப்படவில்லை.எனினும் தமது காணி விடுவிப்பு தொடர்பில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் கொடுத்த வாக்குறுதிகளும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என மக்கள் கவலைவெளியிட்டுள்ளனர்

