பாதயாத்திரையில் பங்கேற்றவர்கள் ஒழுகாற்று குழுவில் விளக்கமளிக்க வேண்டும்

302 0

1-8-2016 16.8.23 2மஹிந்த தரப்பினரின் பாதயாத்திரையில் கலந்து கொண்ட சிறிலங்கா சுதந்திர கட்சியின் பிரதிநிதிகளுக்கு, கட்சியின் ஒழுக்காற்றுக் குழுவில் விளக்கமளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு நேற்று ஜனாதிபதி தலைமையில் ஒன்று கூடிய போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் நேர்முக பரீட்சை ஆவணங்களை கிழித்தெறிந்த குருநாகல் மாவட்ட முன்னாள் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமைய ரத்து செய்ய சிறிலங்கா சுதந்திர கட்சி தீர்மானித்துள்ளது.

மேலும் இந்த கூட்டத்தில், எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்களை தெரிவு செய்வது தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

மத்திய செயற்குழு கூட்டத்தின் போது நேர்முகப்பரீட்சை ஆவணங்கள் கிழித்தெறியப்பட்டமையானது தவறான விடயம் என்று அனைத்து உறுப்பினர்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

இதுதவிர பாதயாத்திரையில் பங்கேற்ற சிறிலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் தொடர்பில் அறிக்கை ஒன்றை தயாரிக்கும் பொறுப்பு ஒழுக்காற்று குழுவுக்கு பகிரப்பட்டுள்ளதாக சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.