பொருளாதார திட்டம் தொடர்பில் அமைச்சர்களுக்கே தெளிவில்லை – அனுரகுமார திஸாநாயக்க

317 0

maxresdefaultஅரசாங்கத்தின் பொருளாதார திட்டம் தொடர்பில் அமைச்சரவை அமைச்சர்களுக்கு கூட தெளிவான விபரங்கள் தெரியாது என்று ஜே வி பி குற்றம் சுமத்தியுள்ளது.

அதன் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கை வர்த்தக சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொருளதார மாநாட்டில் உரையாற்றும் போது அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.

இதேவேளை, இந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் மலிக் சமரவிக்ரம, அரசாங்க தொழிற்துறைகள் நீண்டகாலமாக நட்டத்தை எதிர்நோக்கி வருவதன் காரணமாக, அபிவிருத்திக்கு பாரிய சவால் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த நட்ட நிலைமையை குறைத்துக் கொள்வதற்கான அபிவிருத்தி வேலைத்திட்டங்களை அரசாங்கம் தற்போது மேற்கொண்டு வருகிறது.

இந்த மாத இறுதி வாரத்தில் அல்லது செப்டம்பர் மாதம் ஆரம்பித்தில் ஐந்து வருட பொருளாதார திட்டத்தை பிரதமர் முன்வைக்கவுள்ளதாகவும் அமைச்சர் மலிக் சமரவிக்ரம தெரிவித்துள்ளார்.