சைது செய்யப்பட்ட லஹிரு வீரசேகரவுக்கு விளக்கமறியல்

224 0

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய இணைப்பாளர் லஹிரு வீரசேகர எதிர்வரும் ஜூன் மாதம் 5 ஆம் திகதிவரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டபோதே இந்த விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மருதானையில் இன்று நடத்திய ஊடக சந்திப்பின் பின்னர் காவல்துறையினரால் மருதானை காவல்நிலையத்துக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார்.

இதையடுத்து, மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தின் பின்னர், சுகாதார அமைச்சுக்குள் அத்துமீறி பிரவேசித்து பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டின் அடிப்படையில், லஹிரு வீரசேகர கைதுசெய்யப்பட்டதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

Leave a comment