20 பேருக்கு ஒரே நேரத்தில் தூக்கு

343 0

573884-hang-1373227928-822-640x480-637x330ஆயுத தாக்குதல்களில் ஈடுபட்டார்கள் என்று தெரிவித்து 20 சுன்னி முஸ்லிம்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

ஈரானில் ஷியா முஸ்லிம்களே பெரும்பான்மையானவர்கள் என்பதால், சுன்னி முஸ்லிம்களுக்கு எதிராக பாரிய தண்டனைகள் வழங்கப்படுவதாக மனித உரிமைகள் அமைப்புக்கள் குற்றச்சாட்டியுள்ளன.

2009ஆம்; ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரை காலப்பகுதியில் பல்வேறு தாக்குதல் சம்பவங்களுடன் இவர்கள் தொடர்பு கொண்டதாக தெரிவித்தே தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
கடந்த வருடத்தில் மாத்திரம் ஈரான் 977 பேருக்கு தூக்கு தண்டனை விதித்துள்ளதாக மனித உரிமை அமைப்பான சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.
ஈரான் தூக்கு தண்டனையினை மேற்கொள்வதற்கு முன்னர் உரிய முறையில் விசாரணைகளை மேற்கொள்ள வில்லை என அந்த அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.