இந்திய – பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பதற்றம்

193 0

இந்திய – பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பாகிஸ்தானிய எல்லை செயற்பாட்டு குழுவினர் தாக்குதல் நடத்த முயற்சித்ததாக கூறப்பட்டுள்ளது.

எனினும் இந்த தாக்குதலை இந்திய படையினர் முறியடித்துள்ளனர்.

இந்தியாவின் ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளன.

ஜம்மு – பூன்ச் பகுதியில் எல்லைப் பகுதிக்குள் பிரவேசித்து, இந்திய படையினர் கொலை செய்யும் திட்டம் ஒன்றில் பாகிஸ்தானிய படையினர் ஈடுபட்டதாக கூறப்பட்டுள்ளது.

எனினும் இதனை முறியடித்த இந்திய படையினரின் தாக்குதலில், 2 பாகிஸ்தானிய அதிகாரிகள் கொல்லப்பட்டதாக தெரவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment