அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்களின் கடவுச்சீட்டுக்களை மீள தயாரிப்பதற்கு கட்டணம் அறவிடாதிருக்க தீர்மானம்

1822 46

அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்களின் சேதமடைந்த மற்றும் காணாமல் போன வௌிநாட்டு கடவுச்சீட்டுக்களை மீண்டும் தயாரிப்பதற்கு கட்டணம் அறவிடாதிருக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

அரச தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற  அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட இணை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கயந்த கருணாதிலக இதனை தெரிவித்திருந்தார்.

நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான அனுமதி வழங்கப்பட்டதாக அவர் தெரிவித்திருந்தார்.

Leave a comment