சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று

330 0

USPE-436x315சிறிலங்கா சுதந்திர கட்சியின் விசேட மத்திய செயற்குழு கூட்டம் இன்று பிற்பகல் இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா சுதந்திர கட்சியின் 65வது வருடப் பூர்த்தி நிகழ்வுக்கான ஏற்பாடு மற்றும் எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் உள்ளிட்ட விடயங்கள் குறித்து இதன்போதுகலந்துரையாடப்படவுள்ளது.

சுதந்திர இளைஞர் முன்னணியின் தலைவர் சாந்த பண்டார இதனைத் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், அண்மையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் உரையாற்றிய கட்சியின் பொது செயலாளர் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க, மகிந்த தரப்பு பாதயாத்திரையில் கலந்து கொண்ட சுதந்திர கட்சியின் உறுப்பினர்களுக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கைகள் குறித்து, எதிர்வரும் மத்திய செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.