கண்டி தும்பர போகம்பர சிறைசாலையில் பயங்கரவாத தடை சட்டத்திற்கு கீழ் தடுத்து வைக்கபட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை தமிழ் முற்போக்கு கூட்டணியின் உறுப்பினர்கள் சந்தித்துள்ளனர்.
கூட்டணியின் இணைத் தவைவரும் மலையக மக்கள் முன்னனியின் தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான வே.இராதாகிருஸ்ணன்¸ தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் அடங்கிய குழு சந்தித்து அவர்களின் விடுதலை தொடர்பிலும் அவர்களின் பிரச்சினைகள் தொடர்பிலும் கலந்துரையாடினர்.
கிட்டதட்ட 200 தமிழ் அரசியல் கைதிகள் இலங்கைளில் இருந்ததாகவும் இவர்களில் புனர்வாழ்வு விடுதலைக்கு பின்னர் தற்போது 112 கைதிகள் இருப்பதாகவும் இவர்களில் 16 பேர் இந்த சிறைச்சாலையில் தடுத்து வைக்கபட்டுள்ளனர்.
இந்த கலந்துரையாடல் தொடர்பாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் இணைதவைவரும் மலையக மக்கள் முன்னனியின் தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான வே.இராதாகிருஸ்ணன்¸ அவர்களிடம் வினவிய போது.
இன்றைய தினத்தில் தமிழ் அரசியல் கைதிகளை பார்வையிடுவதற்காக வருகை தந்து அவர்களை பார்வையிட்டோம். தமிழ் அரசியல் கைதிகள் தங்களது துன்ப துயரங்களை எம்மிடம் முறையிட்டனர்.
யுத்தம் முடிந்த பின்னர் அரசியல் கைதிகளின் விடுதலை புணர்வாழ்வு செயற்பாடுகளில் தாங்கள் உள் வாங்கபடவிலலை எனவும். தாங்கள் ஒவ்வொருவருக்கும் எட்டு தொடக்கம் 10 வரையிலான வழக்குகள் பதிவு செய்து விசாரித்து வரவதாகவும்.
இதன் தீர்ப்புக்கள் ஒவ்வொரு விதமாக வருவதால் தாங்கள் எவ்வளவு காலம் சிறை வாழ்க்கைளை அனுபவிக்க போகின்றோம் என்று தெரியவில்லை என்று மிகவும் துன்பத்துடன் தெரிவித்தனர் என கூட்டமைப்பின் உறுப்பினர்கள் குறிப்பிட்டனர்.

