கொழும்பில் குவிந்­துள்ள குப்­பை­களை அகற்றும் பணிகள் தற்­கா­லி­க­மாக இரா­ணு­வத்­தி­ன­ரிடம்

244 0

கொழும்பு மாந­கர சபை எல்­லைக்­குட்­பட்ட பகு­தி­களில் அகற்­றப்­ப­டாமல் வீதி­யோ­ரங்­களில் குவிந்­துள்ள குப்­பை­களை அகற்­று­வ­தற்­கான பணி­களை தற்­கா­லி­க­மாக இரா­ணு­வத்­தி­ன­ரிடம்  ஒப்­ப­டைக்க  நட­வ­டிக்கை எடுத்­துள்­ள­தாக பாரிய நகரம் மற்றும் மேல்­மா­காண அபி­வி­ருத்தி அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க தெரி­வித்தார்.

குப்பை முகா­மைத்­து­வத்­துக்­கான தனி­யா­ன­தொரு பொறுப்­ப­தி­காரி நிய­மிக்­கப்­பட வேண்டும்  என்­ப­துடன் மக்­களும் தமது பொறுப்­பு­ணர்ந்து குப்­பை­களை வகைப்­பி­ரித்து சேக­ரித்தால் மாத்­தி­ரமே நாட்டில் எழுந்­துள்ள குப்பை பிரச்­சி­னைக்கு நிரந்­தர தீர்­வொன்றை பெற­ மு­டியும் எனவும் அவர் குறிப்­பிட்டார்.

குப்­பை­யற்ற யுகத்தை உரு­வாக்­குவோம் எனும் வேலைத்­திட்­டத்தின் ஆரம்ப நிகழ்வு நேற்று வெள்­ளிக்­கி­ழமை பத்­த­ர­முல்­லையில் அமைந்­துள்ள இசு­று­பாய கேட்போர் கூடத்தில்  இடம்­பெற்­றது. இந்­நி­கழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரி­விக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,மீதொட்­ட­முல்ல குப்பை மேடு அனர்த்­தத்­திற்­குள்­ளா­னதில் இருந்து நாட்டில் அன்­றாடம் சேக­ரிக்­கப்­படும் குப்­பைகள்  தொடர்பில் பாரிய பிரச்­சி­னைகள் எழுந்­துள்­ளன. இவ்­வாறு சேக­ரிக்­கப்­படும் குப்­பை­களை கொட்­டு­வ­தற்­கா­ன­தொரு இடத்­தினை சில நக­ர­ ச­பைகள் வழங்­கா­மையும், வழங்­கப்­பட்ட இடங்­களில் குப்­பை­களை  போடு­வ­தற்கு மக்கள் எதிர்ப்பு வெளி­யி­டு­வதும், சேக­ரிக்கும் குப்­பை­களை வகை பி­ரித்து வழங்­கா­மை­யி­னா­லுமே நகர்ப்­ப­கு­தி­களில் பாரி­ய­ளவில் குப்­பைகள் நிறைந்து வழி­கின்­றன. இது தொடர்பில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் தலை­மையில் இடம்­பெற்ற கலந்­து­ரை­யா­டலில் ஆரா­யப்­பட்­டது.

எமது அமைச்­சுக்கு குப்பை முகா­மைத்­துவம் தொடர்பில் பொறுப்பு இல்லை எனினும் அதனால் அதிக பாதிப்பு எமக்கே ஏற்­பட்­டுள்­ளது. மீதொட்­ட­முல்ல குப்பை மேடு அனர்த்­தத்­துக்­கான முழு பொறுப்பை மாந­கர சபை மற்றும் பிர­தே­ச­பையே ஏற்க வேண்டும். ஏனெனில் கொழும்பு நக­ரத்தில் சேக­ரிக்­கப்­படும் குப்­பை­களை மீதொட்ட முல்­லயில் கொட்­டு­வ­தற்கு ஆரம்­பத்தில் எதிர்ப்­புகள் வெளி­யி­டப்­பட்­டன. இருப்­பினும் குப்­பைகள் கொட்­டு­வ­தற்­கான அனு­ம­தி­யினை பின்னர் வழங்­கி­யி­ருந்­தார்கள்.

இதனை வியா­பார நோக்கில் முன்­னெ­டுத்­தி­ருந்­தனர். கொழும்பு நகர குப்பை மாத்­திரம் கொட்­டப்­ப­ட­வில்லை. ஏனைய புற­நகர் பகு­தி­களில் உள்ள குப்­பை­களை கொட்­டு­வ­தற்கு 8000 ஆயிரம் ரூபாவை பெற்­றுக்­கொண்டு 2000 ரூபா செலவில் அங்கு கொட்­டப்­பட்­டன. இதனால் 1500 மில்­லியன் ரூபா பெறு­ம­தி­யான 21 ஏக்கர் நிலம் வீணடிக்­கப்­பட்­டது.

கடந்த காலத்தை போல் அல்­லாது சுற்­றாடல்,மக்­களின் சுகா­தாரம், நாட்டின் அபி­வி­ருத்தி ஆகி­ய­வற்றை  கருத்­திற் ­கொண்டு சமூக பொறுப்­பு­ட­னா­ன­தொரு வேலைத்­திட்­டத்­தினை மேற்­கொள்ள வேண்டும். அத்­துடன் சேக­ரிக்­கப்­படும் குப்­பை­களை முகா­மைத்­துவம் செய்­வ­தற்கு நிரந்­தர தீர்­வொன்றை முன்­வைக்க வேண்டும்.

அதற்­கா­ன­தொரு சட்­ட ­திட்டம் தற்­போது வரையில் எமது நாட்டில் இல்லை, அதனை பொறுப்­பேற்­பது யாரு­டைய பொறுப்பு ?  மாகாண சபை­யி­னு­டை­யதா அல்­லது பிர­தேச சபை­யி­னு­டை­யதா? என்ற பிரச்­சினை இருக்­கின்­ற­தென்­ப­தனை ஜனா­தி­ப­தியின் கவ­னத்­துக்கு கொண்டு சென்­றுள்­ள­துடன் இதற்­கான தீர்வாக குப்பை முகாமைத்துவத்திற்கான தனியானதொரு அதிகாரி நியமிக்கப்பட வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளேன்.

தற்போது நகர் புறங்களில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்றுவதற்கு இராணுவத்தினரையும் சுற்றாடல் அதிகாரிகளையும் கொண்டு தற்காலிகமாக நடவடிக்கை எடுக்கவுள்ளது. மக்களும் தமது பொறுப்புணர்ந்து குப்பைகளை வகைப் பிரித்து சேகரிக்க வேண்டும் என்றார்.

Leave a comment