தண்ணீர் தட்டுப்பாட்டால் அம்மா குடிநீர் அமோக விற்பனை

284 0

தண்ணீர் தட்டுப்பாட்டால் ‘அம்மா குடிநீர்’ ஒரு லிட்டர் மினரல் வாட்டர் கேன் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.தமிழ்நாடு அரசு பேருந்து நிலையங்களிலும், பஸ்களிலும் ரூ.10-க்கு ஒரு லிட்டர் அம்மா மினரல் வாட்டர் கேன் விற்பனை செய்யும் திட்டம் செயல்பட்டு வருகிறது.

 அரசு போக்குவரத்து கழகம் சார்பில் திருவள்ளூர் மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டியில் ரூ. 10.5 கோடி செலவில் அம்மா குடிநீர் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டது. இந்த குடிநீர் உற்பத்தி நிலையம் 2.47 ஏக்கர் பரப்பளவில் செய்யப்பட்டு வருகிறது.இந்த குடிநீர் ஆலையில் தினமும் 3 லட்சம் லிட்டர் குடிநீர் உற்பத்தி செய்யப்படுகிறது.

தற்போது கடும் வறட்சி நிலவுவதால் இந்த குடிநீர் கேன்களுக்கு மவுசு ஏற்பட்டுள்ளது. சென்னை உள்பட அனைத்து பஸ் நிலையங்களிலும் உடனுக்குடன் இந்த 1 லிட்டர் குடிநீர் கேன்கள் விற்று தீர்ந்து விடுகின்றன.தற்போது கடும் வறட்சியால் அனைத்து இடங்களிலும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. வெயில் கொடுமையில் இருந்து தாகத்தை தணிக்க அம்மா குடிநீர் பேருதவியாக திகழ்கிறது.10 ரூபாய்க்கு 1 லிட்டர் மினரல் குடிநீர் என்பது சாதாரண பொதுமக்களுக்கு வர பிரசாதமாக உள்ளது. தனியார் கம்பெனிகளில் 1 லிட்டர் குடிநீர் 15 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

ஏழை எளிய மக்களுக்கு அம்மா மினரல் வாட்டர் கேன் பெரிதும் பயன் உள்ளதாக உள்ளது. அனைத்து பஸ் நிலையங்களிலும் உடனுக்குடன் அம்மா குடிநீர் விற்று தீர்ந்து விடுகிறது.
1 லிட்டர் மினரல் குடிநீர் கேன் உற்பத்தியை அதிகப்படுத்த வேண்டும். அனைத்து இடங்களிலும் பொதுமக்களுக்கு எளிதில் கிடைக்கும் வகையில் செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

சென்னை மாநகரில் ஏழை மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் தினமும் 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த குடிநீர் வழங்கும் நிலையங்களில் பொது மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.வியாசர்பாடி, பட்டாளம் பகுதிகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குமிடங்களில் ஒருசில மணி நேரங்கள் மட்டுமே குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.இது பற்றாக்குறையாக உள்ளதால் குடிநீர் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Leave a comment