தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த குருகுலராஜா, பசுபதிப்பிள்ளை முதலமைச்சர் பக்கம்!

285 0

தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்களான வடமாகாண கல்வி அமைச்சர் குரகுலராஜாவும், மாகாண சபைஉறுப்பினர் பசுபதிப்பிள்ளையும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு ஆதரவாக மாறியுள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் கருத்துத் தெரிவிக்கும்போது, ஆதாரமற்ற அறிக்கையை வைத்து முதலமைச்சர் நடவடிக்கை எடுத்துவிட்டார் என நாங்கள் எரிச்சலில் இருக்கும்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தம்மைத் தவறாக வழிநடாத்திவிட்டார் எனவும், முதலமைச்சரை வீட்டுக்கு அனுப்பிவைக்கும் செயலுக்கும் தாம் ஒருபோதும் உடன்படப் போவதில்லையெனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும், ஆதாரமற்ற அறிக்கைக்காகவே தாம் முதலமைச்சரை எதிர்த்ததாகவும், எதிரிகளுடன் இணைந்து முதலமைச்சரைக் கவிழ்ப்பதில் தாங்கள் உடன்படவில்லையெனவும் தாம் சிறிதரனிடம் தெரிவித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், முதலமைச்சரால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவானது நாவலர்மண்டபத்தில் இயங்கும் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக் குழுவினர் விலைபேசப்பட்டு இரண்டு அமைச்சர்களுக்கும் எதிராக பொய்க் குற்றச்சாட்டுக்களுடன் அறிக்கையைத் தயாரித்து முதல்வரைச் சிக்க வைக்கும் திட்டம் அரங்கேற்றப்பட்டதாகவும் இதற்கெல்லாம் தமிழரசுக் கட்சியின் சில முக்கிய பிரமுகர்கள் உடந்தையெனவும் தற்போதுதான் தமக்குத் தெரியவந்தது என பசுபதிப்பிள்ளை தெரிவித்துள்ளார்

மேலும் வடமாகாண சபையில் முதலமைச்சருக்கெதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தால் முதலமைச்சருக்கு ஆதரவாக வாக்களிக்கப் போவதாகவும் முதல்வருக்கு ஆதரவான நிலைப்பாட்டை சிறிதரன் எடுக்காவிட்டால் சிறிதரனுடன் இணைந்து பணியாற்ற முடியாது என்றும் இருவரும் வலியுறுத்தியுள்ளனர்.

Leave a comment