மோரா சூறாவளி, பங்களாதேஸில் இருந்து இந்தியா நோக்கி நகர்கிறது

280 0

பங்களாதேஸை தாக்கிய மோரா சூறாவளி வலு குறைவடைந்து இன்றைய தினம் இந்தியாவை சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் அசாம், அருணாச்சல் பிரதேஸ் போன்ற பகுதிகளில் மணிக்கு 100 தொடக்கம் 150 கிலோமீற்றர் வேகத்தில் அங்கு இந்த சூறாவளி தாக்கும் என்று இந்தியாவின் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதனால் அச்சுறுத்தல் நிறைந்த பகுதிகளில் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பங்களாதேஸில் இந்த சூறாவளி ஏற்படுத்திய பாதிப்பினால் 7 பேர் பலியாகினர்.

அத்துடன் 4 லட்சத்து 30 ஆயிரம் பேர் வரையில் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக அங்கு ரோஹிங்யா முஸ்லிம்கள் தங்க வைக்கப்பட்டுள்ள அகதிகள் முகாமில் கடும் பாதிப்புகள் பதிவாகி இருக்கின்றன.