இயற்கை அனர்த்தங்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200ஐ தாண்டியுள்ளது.

245 0

இயற்கை அனர்த்தங்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200ஐ தாண்டியுள்ளது.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இதனைத் தெரிவித்துள்ளது.

97 பேர் காணாமல் போயுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

15 மாவட்டங்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள சீரற்ற காலநிலை காரணமாக ஐந்து லட்சத்து 75 ஆயிரத்து 816 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நீரில் மூழ்கியமை காரணமாக மூடப்பட்ட தென் அதிவேக பாதையின் கௌனிகம மற்றும் தொடங்கொட இடையேயான பகுதி வாகன போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய அதிவேக பாதையின் கடவத்தை முதல் கொக்மாதுவ வரை தடையின்றி பயணிக்க முடியும் என அதிவேக வீதியின் செயற்பாட்டு பணிப்பாளர் எஸ்.ஓபநாயக்க தெரிவித்துள்ளார்.

இதனிடையே, 7 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

இரத்தினபுரி, களுத்துறை, நுவரெலியா கேகாலை, காலி, மாத்தறை, மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கையே நீடிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இன்றையதினமும் நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன் காலி – மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் அதிகரிகத்த காற்று வீசும் என்றும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.