ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற அட்டூழியங்களை விசாரணை செய்யும் குழுவில் ராதிகா

268 0

மியன்மாரில் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற அட்டூழியங்கள் குறித்து விசாரணை செய்வதற்கான மூன்று பேர் கொண்ட குழு ஒன்றை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழு நியமித்துள்ளது.

இதில் இலங்கையின் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களும், ஐக்கிய நாடுகளின் செயற்பாட்டாளருமான ராதிகா குமாரசுவாமியும் இணைக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவின் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் இந்திரா ஜெய்சிங் இந்த குழுவுக்கு தலைமை தாங்குகிறார்.

அத்துடன், அவுஸ்திரேலியாவின் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் க்றிஸ்தோபர் டொமினிக் சிடோட்டியும் இந்த குழுவில் இணைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.