கிளிநொச்சி நகரமாவதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபையும், இராணுவமும் தடையாக இருக்கிறன-சி.சிறிதரன் (காணொளி)

307 0

 

கிளிநொச்சி ஒரு நகரமாக மாற்றமடையாது இருப்பதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபையும், இராணுவமும் தடையாக இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் சி.;சிறிதரன் குற்றம் சாட்டியுள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு குற்றம் சாட்டியுள்ளார். நகர அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள் நகர திட்டமிடல் பற்றி விளக்கமளித்த போதே பாராளுமன்ற உறுப்பினர் இந்தக் குற்றச் சாட்டை முன்வைத்தார்.

கிளிநொச்சி டிப்போச் சந்தியில் உள்ள இராணுவ நினைவுச் சின்னம் யாருக்காக இருக்கிறது?  டிப்போச் சந்தியில் இருக்கின்ற செங்கல் சுவர்கள் எப்போது அமைக்கப்பட்டது? எங்கிருந்து செங்கற்கள் கொண்டுவரப்பட்டன? 2009 இற்கு முன் இடம்பெயர்ந்து சென்ற போது அந்த இடத்தில் அப்படி எதுவும் இல்லையே  இது யாருடைய கலாசாரம் என்பதை காட்டுவதற்க யார் எடுக்கிற முயற்சி இதற்கு நகர அவிருத்தி அதிகார சபையும் உடந்தையாக இருக்கிறதா?  எனக் கேள்வி எழுப்பிய பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் கிளிநொச்சி நகரமாவதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபையினர்  விடுகிறார்கள் இல்லை என்று குற்றம் சாட்டியயுள்ளார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாhதன் கிளிநொச்சி டிப்போச் சந்தி இராணுவ நினைவுச் சின்னம் நல்லிணக்கத்திற்கு பொருத்தமானது இல்லை என்பதால் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதுவோம் எனத் தெரிவித்தார்.

அங்கஜன் இராமநாhதன் கருத்து ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டதையடுத்து அது தீர்மானமாகவும் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.