கிளிநொச்சியில் பொது நலனிற்கு இடையூறு விளைவிக்க வேண்டாம் நீதிமன்றம் உத்தரவு

225 0

காணாமல்  ஆக்கப்பட்ட  உறவுகளின்  உறவினர்களால்  கடந்த இரண்டாம் மாதம் இருபதாம் திகதி கிளிநொச்சி  கந்தசாமி  கோவில் முன்றலில்  ஆரம்பிக்கப்பட்ட  கவன ஈர்ப்புப்  போராட்டம் இன்று நூறாவது நாளை  எட்டிய நிலையில் கிளிநொச்சி கந்தசாமி  கோவிலில் சர்வமதப் பிரார்த்தனை  ஒன்று ஏற்ப்பாடு  செய்யப்பட்டிருந்த  நிலையில் நீதிமன்றத்தினால் உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது  குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது

யோகராசா  கலாஞ்சினி மற்றும் சண்முகம்பிள்ளை  சறோயினி ஆகியோர்களது பெயர்கள்  குறிப்பிடப்பட்டு
உங்களால்  கிளிநொச்சி நகரில் உள்ள அமைப்பொன்றின் சார்பாக  ஆர்ப்பாட்டம் ஒன்று  முன்னெடுக்க உள்ளதாக பொலிசார் அறிக்கையிட்டு உள்ளனர்
ஒன்று கூடுவதற்கும் ஆர்ப்பாட்டம் செய்வதற்கும்  அரசியல் அமைப்பில் தங்களுக்கு உள்ள  உரிமையினை நீதிமன்றம் மதிக்கிறது  அதே வேளையில் தங்களுடைய ஆர்ப்பாட்டத்தின் போது ஒழுங்கிற்கும் பொதுமக்களின் நலனிற்கும்   பாதிப்பு ஏற்ப்படாத வகையில் தங்களது ஆர்ப்பாட்டத்தை  முன்னெடுக்க  அறிவுறுத்தப் படுகின்றீர்கள்  என  குறிப்பிடப்பட்டுள்ளது
அத்துடன் இக் கந்தசாமி கோவில் முன்றலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள  நிகழ்வில் கலந்து கொள்ள வடக்கு கிழக்கு  மக்கள் அரசியல் பிரதிநிதிகள்  என  குறித்த முன்றலிற்கு  வருகை தந்தவண்ணம்  உள்ளனர் என அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர்  தெரிவிக்கின்றார்  அத்துடன்  அசம்பாவிதங்கள் ஏற்ப்படும் இடத்து அதனைத் தடுப்பதற்கு  கலக்கம் அடக்கும் பொலிசார் மற்றும்  பொலிஸ் விசேட அதிரடிப்படையினர்  தயார் நிலையில் இருப்பதனையும் அவதானிக்க முடிவதாக தெரிவிக்கின்றார்.