வெள்ளம் மற்றும் மண்சரிவு ஏற்பட்டுள்ள பிரதேசங்களை பார்வையிடச் சென்ற ஆறு பேர் இதுவரையில் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் 16 பேர் வரையில் காயமடைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
வேடிக்கை பார்க்கும் நோக்கில் வெள்ளம் மற்றும் மண்சரிவு ஏற்பட்டுள்ள பகுதிகளுக்கு பிரவேசிப்பதை தவிர்க்குமாறும் காவற்துறையினர் பொதுமக்களிடம் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இதேவேளை, களனி, களு, ஜின் மற்றும் நில்வளா கங்கைளில் நீர்மட்டம் தற்போது குறைந்து காணப்படுவதாகவும், எனினும் சில தாழ்நிலப் பகுதிகளில் நீர்மட்டம் தொடர்ந்தும் அவ்வாறே காணப்படுவதாக நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

