தென்மேற்கு பகுதி மற்றும் வடமேல் மாகாணத்திலும் இடியுடன் கூடிய மழை

323 0
வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக காலநிலையில் மாற்றம் ஏற்படும் என எதிர்ப்பார்ப்பதாக காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
இதற்கமைய, நாட்டில் தற்போது மழை வீழ்ச்சியானது குறைவடைந்துள்ள போதிலும், சில தினங்களில் மழையுடனான காலநிலை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.நாட்டின் தென்மேற்கு பகுதி மற்றும் வடமேல் மாகாணத்திலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

சில இடங்களில் 100 மில்லி மீட்டருக்கும் அதிகளவான மழை பெய்யக்கூடும் என அந்த நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.