கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கிரீன் சேனல் வழியாக சட்டவிரோதமான முறையில் பொருட்களைக் கடத்த முயன்ற இருவர் சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுமார் 26 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஏலக்காய், வாசனைத் திரவியங்கள், கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் மடிக்கணினிகள் ஆகியன அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்கள், கந்தானை பகுதியை சேர்ந்த 47 வயதுடைய பெண் ஒருவரும், கொழும்பு, நாரஹேன்பிட்டி பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய ஆண் ஒருவரும் என தெரியவந்துள்ளது.
இவர்கள் இருவரும் நேற்று புதன்கிழமை (25) காலை டுபாய் மற்றும் இந்தியாவின் பெங்களூரு நகரிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான இரண்டு வெவ்வேறு விமானங்கள் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

