மழை தொடர்ந்தால் – மக்களுக்கு எச்சரிக்கை

232 0

மழையுடனான காலநிலை தொடரும் பட்சத்தில் 7 மாவட்டங்களிலும் பல பிரதேசங்களில் வசிக்கும் மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு தேசிய கட்டிட ஆய்வு மையம் அறிவித்துள்ளது

இதற்கமைய இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி, அலப்பான, பெல்மடுல்ல, குருவிட்ட, கிரியெல்ல, இம்புல்பே, அயகம, கஹவத்தை, கலவான, கொலொன்ன, நிவித்திகல பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கேகாலை மாவட்டத்தின் புலத்கொஹூபிட்டி, தெரனியாகல, யட்டியாந்தோட்டை, தெஹியோவிட்ட பகுதிகளை சேர்ந்த மக்களையும், நுவரெலிய மாவட்டத்தின் அம்பகமுவ மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் வசிக்கும் மக்களையும் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, காலி மாவட்டத்தின் பத்தேகம, யக்கலமுல்ல, நெலுவ, தவலம, நியாகம, நாகொட பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட மக்களையும், ஹம்பாந்தோட்டை மாவட்த்தின் வலஸ்முல்ல மற்றும் கடுவான ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில பாதுகாப்பற்ற பகுதிகயில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுதவிர, களுத்துறை மாவட்டத்தின் புலத்சிங்கள, அகலவத்த, வலள்ளாவிட்ட மற்றும் பதுரலிய பிரதேச செயலகங்களில் வசிக்கும் மக்களையும் மாத்தறை மாவட்டத்தின் கொடபொல, பஸ்கொட, பிடபெத்தர, முலட்டியன பிரதேச செயலகங்களின் பாதுகாப்பாற்ற பகுதிகளில் வசிக்கும் மக்களையும் அங்கிருந்து வெளியேறுமாறும் தேசிய கட்டிட ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.