பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் பொலிஸ் மாஅதிபர் உடன் பதவி விலகவேண்டும் – மக்கள் குரல் அமைப்பு வலியுறுத்தல்

10 0

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் அரசாங்கம் பலவீனமடைந்துள்ளது. இதன் பொறுப்பை ஏற்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் உடன் பதவி விலக வேண்டும் என்பது எமது நிலைப்பாடாகும். அதேபோல் பொலிஸ் துறையும் இன்று அரசியலாக்கப்பட்டுள்ளது. ஆகவே பொலிஸ்மா அதிபரும் உடன் பதவி விலக வேண்டும் என மக்கள் குரல் அமைப்பின் இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் குரல் அமைப்பின் சார்பாக ஊடக அறிக்கையை வெளியிட்டு மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

படுகொலை கலாசாரம் 2025 ஆம் ஆண்டு முடிவுக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் எதிர்பார்ப்புக்கு மாறாக படுகொலை கலாசாரம் பலமடைந்து தற்போது தீவிரமடைந்துள்ளது.

நீதியை நிலைநாட்டும் நீதிமன்றம் அதிகாரிகள், சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்டமை ஒட்டுமொத்த சமூக கட்டமைப்பையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. எந்நேரத்தில் எங்கு படுகொலைகள் இடம்பெறும் என்ற அச்சத்தில் தான் மக்கள் இன்று வாழ்கிறார்கள்.

தேசிய பாதுகாப்பு மற்றும் பொதுமக்களின் இயல்புவாழ்க்கையை உறுதிப்படுத்தும் பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு.தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம் இந்த பொறுப்பை நிறைவேற்றுவதில் தோல்வியடைந்துள்ளது.பொது பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் சகல கட்டமைப்பும் பலவீனமடைந்துள்ளது.

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் அரசாங்கம் பலவீனமடைந்துள்ளது. இதன் பொறுப்பை ஏற்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் உடன் பதவி விலக வேண்டும் என்பது எமது நிலைப்பாடாகும். அதேபோல் பொலிஸ் துறையும் இன்று அரசியலாக்கப்பட்டுள்ளது. ஆகவே பொலிஸ்மா அதிபரும் உடன் பதவி விலக வேண்டும்.

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு. பாதுகாப்பை பலப்படுத்துமாறு அரசாங்கத்திடம் வலியுறுத்துகிறோம்.தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய விடயங்களை அரசியல்மயப்படுத்த கூடாது என்பதை அரசாங்கம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

10அக்குரேகொட இரட்டைக் கொலை: இரண்டாவது துப்பாக்கிதாரி மொனராகலையில் கைது!
அக்குரேகொட பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றின் வாகனத் தரிப்பிடத்தில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில், இரண்டாவது துப்பாக்கிதாரி என சந்தேகிக்கப்படும் நபர் மொனராகலை, ஹுலந்தாவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

மொனராகலை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள நபர் உண்மையாகவே இரண்டாவது துப்பாக்கிதாரி தானா என்பதை உறுதிப்படுத்துவதற்காக, நவீன முக அடையாளத் தொழில்நுட்பம் மூலம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இக்கொலைச் சம்பவத்தில் டி-56 ரக துப்பாக்கியால் தாக்குதல் நடத்திய பிரதான துப்பாக்கிதாரி ஏற்கனவே அம்பலாங்கொடை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் இராணுவத்திலிருந்து தப்பியோடியவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளதுடன், தற்போது 90 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகின்றார்.

துப்பாக்கிதாரியை பன்னிபிட்டியவிலுள்ள தங்குமிடத்திற்கு அழைத்து வந்த நபர், ஏற்கனவே தாய்லாந்துக்கு தப்பியோடியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன், இந்த கொலைக்கு உடந்தையாக இருந்த மூவர் முன்னதாக கஹதுடுவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தனர்.

நேற்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வூட்லர், பெப்ரவரி 13 ஆம் திகதி இடம்பெற்ற இந்த இரட்டைக் கொலை தொடர்பான விசாரணைகள் தற்போது 80 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகக் கூறியமை குறிப்பிடத்தக்கது.