இந்தியாவின் அயோத்தி நகரில் உள்ள சிவன் கோவிலின் தலைமை சுவாமி கைலாசானந்த் கிரி ஜி மகாராஜ் இன்று செவ்வாய்க்கிழமை (24) விஜித்த ஹேரத் உள்ளிட்ட பல உயர் அதிகாரிகளை சந்தித்தார்.
நாட்டுக்கு வருகை தந்துள்ள கைஷானந்த் கிரிஜி மகாராஜ், பொதுமக்கள் மற்றும் மதகுருமார்களை கொண்ட 14 பிரதிநிதிகளை கொண்ட குழுவுடன் சேர்ந்து, இலங்கையில் உள்ள பல இந்து திருத்தலங்களை பார்வையிட திட்டமிட்டுள்ளார்.
அதன்படி இக்குழுவினர் வரலாற்று பிரசித்திப்பெற்ற கோவில்களான மன்னாரில் உள்ள திருக்கேதீச்சரம், யாழ்ப்பாணத்தில் உள்ள நகுலேஸ்வரம். நுவரெலியா சீதையம்மன் ஆலயம் மற்றும் பொலன்னறுவையில் உள்ள பழமையான கோட்டைகளையும் சிவாலயங்களையும் பார்வையிட திட்டமிட்டுள்ளனர்.
மேலும், இந்த பிரதிநிதிக் குழுவின் வருகை, இலங்கையின் மதச் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கான ஒரு மதிப்புமிக்க வாய்ப்பாக அமைந்துள்ளது.

