உயிருக்கு போராடும் மக்கள்! ஹெலிகொப்டருடன் பறந்து சென்ற படகு

245 0

களுத்துறை மாவட்டத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மக்களை மீட்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

வெள்ளம் ஏற்பட்டுள்ள பிரதேசத்திற்கு ஹெலிகொப்டர் மூலம் அவசரமாக படகு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

வீதியில் பயணிக்கும் போது ஏற்படும் தடை மற்றும் தாமத்தை குறைத்துக் கொள்வதற்காக இவ்வாறு ஹெலிகொப்டர் மூலம் படகு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

கட்டுகுருந்த விமான படை முகாமில் இருந்து ஹெலிகொப்டர் மூலம் படகு கொண்டு செல்லும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

இலங்கையில் ஹெலிகொப்டர் மூலம் படகு கொண்டு செல்லப்படும் முதல் சந்தர்ப்பம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.