நாட்டில் அதிகரித்து வரும் பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகள் மற்றும் நிலக்கரி கொள்வனவு ஊழல்கள் தொடர்பில் அரசாங்கத்தின் மீது ஒட்டுமொத்தமாக குற்றம் சுமத்துவது முறையற்றது என ஜனநாயக இடதுசாரி முன்னணி கட்சியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.
அவர் அங்கு மேலும் கூறுகையில்,
தற்போது நாட்டில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் மற்றும் பாதாள உலகக் குழுக்களின் மோதல்கள் அதிகரித்துள்ளன. குற்றவாளிகள் தமது இலக்குகளை நிறைவேற்றிக் கொள்ள அவசரப்படுகின்றனர். எனினும், இவர்களைக் ஒடுக்குவதற்கு அரசாங்கம் தீவிரமான சுற்றிவளைப்புகளை முன்னெடுத்து வருகின்றது. வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றாலும் இனி தப்பிக்க முடியாது என்ற அச்சம் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே அவர்கள் அவசரமாக இவ்வாறான தாக்குதல்களை முன்னெடுத்து வருகின்றனர். விரைவில் இவர்கள் அனைவரும் கைது செய்யப்படுவார்கள்.
தற்போது நிலக்கரி கொள்வனவு தொடர்பான பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. தரம் குறைந்த நிலக்கரியை அதிக விலைக்கு கொள்வனவு செய்ததன் காரணமாக மின்சார சபைக்கு பாரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த நஷ்டத்தை நுகர்வோர் தலையில் சுமத்த அரசாங்கம் முயற்சிக்கக் கூடாது.
இந்த ஊழலுக்குப் பொறுப்பான அமைச்சர் இது குறித்து உரிய பதிலை வழங்க வேண்டும். ஒரு தனிப்பட்ட அமைச்சரின் அல்லது அதிகாரியின் தவறுக்காக ஒட்டுமொத்த அரசாங்கத்தையும் பட்டை தீட்டுவது தவறான அரசியல் கலாசாரமாகும். குறித்த அமைச்சரால் தெளிவான விளக்கத்தை அளிக்க முடியாவிட்டால், அவரை அமைச்சரவையிலிருந்து நீக்கிவிட்டு, அரசாங்கம் புதிய அமைச்சரை நியமிக்க வேண்டும். உண்மையான குற்றவாளியை விட்டுவிட்டு அரசாங்கத்தை மட்டும் விமர்சிப்பதன் மூலம் உண்மையான குற்றவாளி தப்பித்துக் கொள்ளவே வழி பிறக்கும்.
முந்தைய அரசாங்க காலத்து ஊழல்கள் தற்போது விசாரிக்கப்பட்டு வருகின்றன. ஆனால், தற்போதைய அரசாங்கத்தில் உள்ளவர்களுக்கு எதிராக எவ்வித முறைப்பாடுகளும் காவல்துறைக்கோ அல்லது இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கோ இதுவரை முன்வைக்கப்படவில்லை. நாடாளுமன்றத்தின் உயர்மட்ட அதிகாரி ஒருவருக்கு எதிராக முறைப்பாடு கிடைத்துள்ளது. அவ்வாறான நிலையில், அந்த அதிகாரி தனது பதவியிலிருந்து விலகி, விசாரணைகளுக்கு இடமளித்து தாம் நிரபராதி என நிரூபிக்க வேண்டும். அதுவே சரியான முறையாகும்.
முன்னதாக சர்ச்சைக்குள்ளான 323 கொள்கலன் விவகாரத்தில் தொடர்புடைய அமைச்சர் தற்போது அந்தப் பொறுப்பில் இல்லை. அது தொடர்பில் பாராளுமன்ற விசேட குழு விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது. அது ஒரு சிறந்த முன்மாதிரியாகும் என்றார்.
இவ்வாறான நிலையில் கருத்து வெளியிட்டுள்ள பேராசிரியர் ரொஹான் குணரத்ன மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையின் நீண்டகால ஸ்திரத்தன்மைக்கு வலுவான சட்டங்கள் அவசியமாகும். பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்கள் எக்காரணம் கொண்டும் நீர்த்துப்போகச் செய்யப்படக்கூடாது அரசியல் தலைவர்கள் ஆட்சிக்கு வருவதற்காகப்பேசும் சொல்லாடல்களுக்கு அப்பால் தேசிய பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் அச்சுறுத்தல் தற்போது நிலத்தடியில் இருக்கும் புற்றுநோய் போன்றதாகும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். புலம்பெயர் தேசங்களில் அந்த அமைப்பின் வேர்களாக உள்ள வலையமைப்புகள் தற்போதும் வலுவாக இருக்கின்றன. அவ்வாறான நிலையில் பயங்கரவாதத்துக்கு எதிரான சட்டங்கள் பலவீனமான இருக்கும்போது அவை மீண்டும் தலைதூக்கக்கூடும் ஆபத்துக்கள் உள்ளன.
அதேநேரம், சர்வதேசத்துக்கு பயங்கரவாத அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய குழுக்களான அல்-கொய்தா மற்றும் ஐ.எஸ் ஆகியவற்றின் ஊடுருவல்களைத் தடுப்பதற்கு கடுமையான நடவடிக்கைகள் தேவையாக உள்ளன. இணையவெளியின் ஊடாக முன்னெடுக்கப்படும் தீவிரவாதப் பிரசாரங்கள் மற்றும் ஆள்சேர்ப்பு நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த வலுவான சட்டங்களும் நவீன புலனாய்வுத் திறன்களும்; அவசியமாகும்.
தற்போதைய நிலையில் நிறுத்தப்பட்டுள்ள புனர்வாழ்வுத் திட்டங்களை அரசாங்கம் உடனடியாக மீண்டும் ஆரம்பிக்க வேண்டும். மதத் தலைவர்கள் சதித்திட்டக் கோட்பாடுகளைப் பரப்பாமல் இருப்பதோடு தீவிரவாதத்தைத் தடுப்பதற்கான ஆக்கபூர்வமான முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.

