புலம்பெயர் தேசங்களில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் வேர்களாக இருக்கும் அமைப்புக்கள் வலுவாக இருக்கின்போது பயங்கரவாதம் குறித்த சட்டங்கள் பலவீனமாக இருந்தால் அவை மீண்டும் தலைதூக்குவதற்கான ஆபத்துக்கள் உள்ளதாக பேராசிரியர் ரொஹான் குணரத்ன எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமானது வலுவானதாக இருக்க வேண்டும் என்பதோடு அது தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாக அமையவேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும்’ சர்ச்சைக்குரிய சட்டவரைவானது ஐக்கிய நாடுகள் சபையின் முகவரகங்கள், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் உள்நாட்டு சிவில் அமைப்புகளிடமிருந்து பெறப்பட்ட பின்னூட்டங்களின் அடிப்படையில் மேலதிக திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு சர்வதேச நியமங்களுக்கு அமைவாக வரைவு இறுதி செய்யப்படும் என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார அறிவித்துள்ளார்.

