நெருங்கும் தேர்தல்… ஜேர்மனியில் முன்னேறும் புலம்பெயர்தல் எதிர்ப்புக் கட்சி

14 0

ஜேர்மன் மாகாணம் ஒன்றில் தேர்தல் நெருங்கும் நிலையில், அங்கு புலம்பெயர்தல் எதிர்ப்பு வலதுசாரிக் கட்சி ஒன்று வேகமாக முன்னேறிவருகிறது.

முன்னேறும் புலம்பெயர்தல் எதிர்ப்புக் கட்சி

வடகிழக்கு ஜேர்மன் மாகாணமான Mecklenburg-Western Pomeraniaவில் ஏழு மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது.

இந்நிலையில், அங்கு நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகளில் புலம்பெயர்தல் எதிர்ப்பு வலதுசாரிக் கட்சியான Alternative for Germany (AfD) கட்சிக்கு அதிக ஆதரவு உள்ளது தெரியவந்துள்ளது.

கருத்துக்கணிப்பில், AfD கட்சிக்கு மக்கள் ஆதரவு 37 சதவிகிதம் உள்ளது தெரியவந்துள்ளது.

ஆளும் கூட்டணியிலுள்ள Social Democrats (SPD) கட்சி இரண்டாவது இடத்தையே பிடித்துள்ளது. அக்கட்சிக்கு 23 சதவிகித ஆதரவும், ஆளும் கூட்டணியிலுள்ள மற்றொரு கட்சியான Christian Democrats (CDU) கட்சிக்கு 13 சதவிகித ஆதரவும் உள்ளது.