சுவிட்சர்லாந்துக்கு கடந்த ஆண்டில் புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை, 2024ஆம் ஆண்டைவிட குறைந்துள்ளது.
புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை குறைந்தது
2024ஆம் ஆண்டை ஒப்பிடும்போது, 2025ஆம் ஆண்டில் சுவிட்சர்லாந்துக்கு புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை, 10.5 சதவிகிதம் குறைந்துள்ளதாக ஃபெடரல் தரவுகள் தெரிவிக்கின்றன. 2025ஆம் ஆண்டில், 165,386 பேர் சுவிட்சர்லாந்துக்கு புலம்பெயர்ந்துள்ளனர். 2024ஆம் ஆண்டை ஒப்பிடும்போது, இது எண்ணிக்கையில் 5,221 குறைவு ஆகும்.
165,386 பேர் சுவிட்சர்லாந்துக்கு வந்துள்ள நிலையில், 82,659 பேர் சுவிட்சர்லாந்திலிருந்து வெளியேற, 2024ஐ ஒப்பிடும்போது, நிகர புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை 10.5 சதவிகிதம் குறைந்துவிட்டது.

