பிரான்ஸ் தலைநகர் பாரீஸிலுள்ள ஈபிள் கோபுரம் முதலான பல இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து பெரும் பரபரப்பு உருவானது.பிரான்ஸ் தலைநகர் பாரீஸிலுள்ள ஈபிள் கோபுரம் முதலான பல இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து பெரும் பரபரப்பு உருவானது.
அதைத்தொடர்ந்து பல்வேறு இடங்களுக்கு மோப்ப நாய்களுடன் விரைந்த பொலிசார், Montparnasse கோபுரம், Sciences Po பல்கலை முதலான கட்டிடங்களில் இருந்தவர்களை உடனடியாக வெளியேற்றியுள்ளார்கள்.
என்றாலும், ஈபிள் கோபுரத்திலிருந்தவர்கள் வெளியேற்றப்படவில்லை, ஈபிள் கோபுரம் எந்த தடையும் இன்றி இயங்கும் என்றும் அதிகாரிகள் கூறிவிட்டார்கள்.
இதற்கிடையில், மோப்ப நாய்களுடன் பொலிசார் மேற்கொண்ட சோதனைகளில் எந்த கட்டிடத்திலும் எந்த வெடிபொருளும் இல்லை என தெரியவந்துள்ளது.
பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் உருவாக்கிய இந்த விடயம் தொடர்பில் பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.

