பிரான்ஸ் கம்பெனியுடனான விமான ஒப்பந்தம் ரத்து

298 0

201608030534311072_manohar-parrikar-cancels-france-aircraft-deal-says-reports_SECVPFபிரான்ஸ் நாட்டின் ஏர்பஸ் கம்பெனியிடம் இருந்து ரூ.9 ஆயிரம் கோடி மதிப்பிலான எரிபொருள் நிரப்பும் 6 விமானங்கள் இறக்குமதி செய்வதற்கு இந்தியா ஒப்பந்தம் செய்திருந்தது.
இந்த ஒப்பந்தத்தை ராணுவ மந்திரி மனோகர் பாரிக்கர் திடீரென ரத்து செய்ய முடிவு எடுத்துள்ளார். இந்த தகவலை ராணுவ அமைச்சக வட்டாரங்கள் வெளியிட்டுள்ளன.

ஏற்கனவே 126 நடுத்தர பன்முக போர் விமானங்கள் இறக்குமதி செய்ய மேற்கொண்ட ஒப்பந்தத்தை ரத்து செய்த நிலையில், இப்போது எரிபொருள் நிரப்பும் விமான இறக்குமதியையும் ரத்து செய்ய முடிவு செய்திருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.

இந்திய விமானப்படைக்கு நடுவானில் எரிபொருள் நிரப்பும் விமானங்களை வாங்குவது தொடர்பாக அரசாங்கங்கள் இடையிலான நடைமுறையை பின்பற்றப்போவதாக ராணுவ அமைச்சக வட்டாரங்கள் மேலும் கூறுகின்றன.