அவதூறு வழக்குகளை ரத்து செய்யக்கோரி விஜயகாந்த், பிரேமலதா வழக்கு

337 0

201607281040513108_Premalatha-to-take-new-posting-in-DMDK-party-Vijayakanth_SECVPFதங்கள் மீது தொடரப்பட்ட 14 அவதூறு வழக்குகளையும் ரத்து செய்யக்கோரி விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா ஆகியோர் சார்பில் தொடரப்பட்ட வழக்கு விசாரணை 4-ம் தேதிக்குத் தள்ளி வைக்கப்பட்டது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா ஆகியோர் மீது தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் சார்பில் தொடரப்பட்ட 14 குற்றவியல் அவதூறு வழக்குகள் பல்வேறு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன.

இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி விஜயகாந்த் மற்றும் பிரேமலதா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதை விசாரித்த உச்ச நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நிவாரணம் பெற உத்தரவிட்டது.

இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் விஜயகாந்த், பிரேமலதா ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவில், தங்கள் மீது தொடரப்பட்ட 14 அவதூறு வழக்குகளையும் ரத்து செய்யவேண்டுமெனக் கோரியிருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி பி.என்.பிரகாஷ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய மனுதாரர் தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டதால், வழக்கு விசாரணை ஆகஸ்டு 4-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.