பிரித்தானியாவில் இருந்து இடம்பெயர எளிதான நகரம் இதுதான்

17 0

ஐரோப்பில் இடம்பெயர பிரித்தானியர்களுக்கு எளிதான நகரம் எது என்று தெரிய வந்துள்ளது.

2025ஆம் ஆண்டில் பிரித்தானிய குடியேற்ற எண்ணிக்கை 6 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்தது தேசிய புள்ளிவிவர அலுவலகத்தின்படி கூறப்பட்டது. இதன்மூலம் அதிகமான பிரித்தானியர்கள் நாட்டை விட்டு வெளியேறுவது தெரிய வந்துள்ளது.

அவ்வாறு வெளியேறுபவர்களின் தேர்வாக நெதர்லாந்து நாடு உள்ளது. புதிய ஆராய்ச்சியின்படி, ஐரோப்பாவில் பிரித்தானியர்கள் இடம்பெயர எளிதான நகரமாக நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் பெயரிடப்பட்டுள்ளது.

uk emigration to amsterdam easiest city relocate

காரணம் என்ன?

முழு டிஜிட்டல் முறை விசா செயல்முறை, வலுவான வேலை சந்தை, நல்ல ஆங்கில சரளமான மொழி மற்றும் பாரிய வெளிநாட்டு சமூகம் காரணமாக இந்நகரம் முதலிடத்தில் உள்ளது.

uk emigration to amsterdam easiest city relocate

ஆம்ஸ்டர்டாமின் மொத்த மக்கள்தொகையில் 34 சதவீதம் பேர் வெளிநாட்டில் பிறந்தவர்கள் ஆவர்.

இந்த ஆராய்ச்சியில் ஆய்வு செய்யப்பட்ட நகரங்களில் ஜேர்மனியின் பெர்லின் இரண்டாவது இடத்தில் உள்ளது.

இந்நகரம் நாட்டிற்கு வெளியே பிறந்தவர்களில் 13.15 சதவீதத்தினருடன் நன்கு நிறுவப்பட்ட வெளிநாட்டவர் இருப்பையும், 1000 குடியிருப்பாளர்களுக்கு 33 காலியிடங்களுடன் ஒரு வலுவான வேலை சந்தையையும் கொண்டுள்ளது.

uk emigration to amsterdam easiest city relocate

இங்கு வாழ்க்கை செலவுகள் லண்டனை விட 21.2 சதவீதம் குறைவு. பெர்லின் மிக உயர்ந்த சம்பளத்தைக் கொண்டுள்ளது.

ஜேர்மனியின் மற்றொரு நகரங்களான ஃப்ராங்பர்ட், முனிச், ஸ்பெயினின் மேட்ரிட், பிரான்சின் பாரிஸ் ஆகிய நகரங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.