கடும் பனிப்பொழிவு காரணமாக, பல்பொருள் அங்காடிகளை காலி செய்துவருகிறார்கள் சுவிஸ் மாகாணமொன்றின் மக்கள்.
கடுமையான பனிப்பொழிவு மற்றும் பனிச்சரிவு அச்சம் காரணமாக, சுவிட்சர்லாந்தின் Valais மாகாணத்தின் பல பகுதிகள் முடங்கியுள்ளன.
சாலைகள் பல மூடப்பட்டுள்ளதால், மலைகளிலிருக்கும் சில கிராமங்களுக்கு பயணிப்பதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
கடும் பனிப்பொழிவு காரணமாக அச்சத்தில் கடைகளை காலி செய்துவரும் சுவிஸ் மக்கள் | Valais Snow Triggers To Panic Buying
Zermatt மற்றும் Saas-Fee பகுதிகளில் சரக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால், அப்பகுதிகளில் வாழும் மக்கள், அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படுமோ என பயந்து பல்பொருள் அங்காடிகளை காலி செய்துவருகிறார்கள்.
சில பல்பொருள் அங்காடிகளில் பொருட்கள் எதுவும் இல்லாமல் ஏற்கனவே ஷெல்ஃப்கள் காலியாக இருப்பதாக மக்கள் கூறுகிறார்கள்.
இதற்கிடையில் அவ்வப்போது மின் தடையும் ஏற்படுவதால், கடைக்காரர்கள், சமைக்காமலே உண்ணக்கூடிய வகையிலான உணவுப்பொருட்களை அதிக அளவில் கடைகளில் விற்பனைக்கு வைத்துவருகிறார்கள்.

