வான்எல – கந்தளாய் வீதியின் பன்சல் கொடல்ல பகுதியில், கந்தளாய் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி பாதுகாப்பு வேலியில் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் சாரதியும் பின்னால் அமர்ந்து பயணித்த ஒருவரும் காயமடைந்து கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மோட்டார் சைக்கிள் சாரதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் வான்எல, கந்தளாய் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் எனத் பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து சம்பவம் தொடர்பில் வான்எல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

