கொட்டியாகல பகுதியில் கஞ்சா பயிரிட்ட சந்தேக நபர் கைது

7 0

எத்திமலை  பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டியாகல பகுதியில், காணியொன்றில் பயிரிடப்பட்டிருந்த 18 கஞ்சா செடிகளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எத்திமலை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் குழுவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில்  மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் கொட்டியாகல பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் எத்திமலை பொலிஸார்  மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.