துறைமுக அதிகாரசபையின் புதிய தலைவராகத் துறைசார் நிபுணரான கலாநிதி மஹிந்த பராக்கிரம திசாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
பராக்கிரம திசாநாயக்க, இதற்கு முன்னர் கடந்த ஜனவரி 08 ஆம் திகதி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் கடல்சார், துறைமுகங்கள் மற்றும் பொருட்கள் கையாளுகை தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டிருந்தார்.
அரசியலமைப்பின் 41(1) உறுப்புரைக்கு இணங்க இந்த நியமனம் வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, தற்போது அவர் துறைமுக அதிகாரசபையின் தலைவராகவும் பொறுப்பேற்றுள்ளார். இதற்கான நியமனக் கடிதம் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டது.
கலாநிதி பராக்கிரம திசாநாயக்க கடல்சார் மற்றும் தளவாடங்கள் துறையில் சர்வதேச ரீதியில் மதிக்கப்படும் ஒரு நிபுணராவார்.

