நாட்டில் நிலவும் கனமழை மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 80 கிலோமீற்றர் வேகத்தில் வீசும் எனவும் கடலோர பகுதிகளில் மக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறும் வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த மூன்று நாட்களாக நாட்டில் கனமழை பெய்துவரும் நிலையில் நாட்டின் 14 மாவட்டங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக களுத்துறை, இரத்தினபுரி மாவட்டங்கள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ள அதே வேளையில் கேகாலை, காலி பகுதிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நாட்டின் இந்த மோசமான காலநிலை இந்த மாதம் இறுதி வரையில் நீடிக்கும் நிலையில் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு தொடர்ந்தும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றது.

