இலங்கையர் உட்பட 1600 க்கும் மேற்பட்ட அகதிகள் அமெரிக்காவில் குடியேற ஆர்வம்

191 0

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஒபாமா ஆட்சிக் காலக்கட்டத்தின் இறுதி நேரத்தில் அவுஸ்திரேலியா – அமெரிக்கா இடையே கையெழுத்தான ஒரே முறை அகதிகளை குடியமர்த்துவதற்கான ஒப்பந்தத்தின் படி, அவுஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்புமுகாம்களில் இருந்து 1,250 அகதிகள் அமெரிக்காவில் நிரந்தரமாககுடியமர்த்தப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது.

அதற்கான ஆயத்த பணிகள் நடந்துவரும் நிலையில், இதற்கு 1600க்கும் மேற்பட்ட அகதிகள் ஆர்வம் காட்டியுள்ளதாக தெரியவந்துள்ளது.

மனுஸ் மற்றும் நவுரு தீவில் உள்ள அவுஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்களில், அமெரிக்க குடிவரவு அதிகாரிகள் இதற்கான பணிகளை அகதிகளிடையே மேற்கொண்டு வருகின்றனர்.

சுமார் 900 அகதிகளிடையே இதற்கான முதற்கட்ட நேர்காணல்கள் முடிந்துள்ளன.

அதில் 800க்கும் மேற்பட்டோரிடம் கைரேகைபதிவுகளும், 250 பேரிடம் பாதுகாப்பிற்கான நேர்காணல்களும் நிறைவடைந்துள்ளதாகவும் மருத்துவ பரிசோதனைகளும் தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.