காட்டு யானை மோதியதில் ரயில் தடம் புரண்டுள்ளது

16 0

கொழும்பு கோட்டையிலிருந்து திருகோணமலை நோக்கி வந்த இரவு நேர ரயில், செவ்வாய்க்கிழமை (17)அதிகாலை கித்துல்லுத்துவ பகுதியில் வைத்து காட்டு யானை மோதியதில் தடம் புரண்டுள்ளதாக பிரதான ரயில்வே கட்டுப்பாட்டு பிரிவு அறிவித்துள்ளது.

ரயிலுடன் மோதிய யானை சம்பவ இடத்திலேயே இறந்துள்ளது. இயந்திரத்தின் முன்பக்க சக்கரங்கள் இரண்டும் தடம் புரண்டதால் ரயில் பாதையில் சிறிய சேதம் ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக செவ்வாய்(17) திருகோணமலைக்கும் கல்ஓயா சந்திக்கும் இடையிலான ரயில் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டிருந்தன.

இதே வேளை நீராவி எஞ்சின் பொருத்தப்பட்டு 16 ந் திகதி திருகோணமலைக்கு வந்திருந்த விசேட வெளிநாட்டு சுற்றுலா பிரயாணிகள் ரயில் மீண்டும் கொழும்பு திரும்புவது 17 ந் திகதி மாலை வரை தாமதமடைந்தது.

வனவிலங்கு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் விபத்தில் இறந்த யானையின் மரணம் குறித்து விசாரணைகளை தொடங்கி உள்ளனர்