மனித உரிமைகள் ஆணையகத்தின் 61 வது கூட்டத்தொடரில் சிறிலங்கா பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடாத்தப்படுகின்ற தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை நடாத்தக் கோரியும் தமிழீழமே தமிழர்களுக்கான நிரந்திர தீர்வு என்பதனை வலியுறுத்தியும் கடந்த 12 அன்று பிரித்தானியாவில் ஆரம்பமான மனிதநேய ஈருருளிப் பயணமானது இன்று 5வது நாளாக காலை 9 மணியளவில் பெல்சியத்தில் அமைந்துள்ள மாவீரர் கல்லறையில் இருந்து அகவணக்கத்துடன் ஆரம்பித்த ஈருருளிப்பயணமானது லக்ஸ்சம்பூர்க் நகரை நோக்கி பயணித்து நாமுர் எனும் இடத்தில் மாலை நிறைவடைந்தது.தொடர்ந்து ஈருருளிப் பயணமானது,ஜேர்மனி மற்றும் பிரான்ஸ்சை தொடர்ந்து ஜெனிவாவை சென்றடையும்.



