ஏக்கிய இராஜ்ய வரைபை நிராகரித்து சமஸ்டி தீர்வை முன்வைப்பது தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றது.

26 0

சிறிலங்கா அரசால் புதிதாக உருவாக்கப்படவுள்ள ஒற்றையாட்சி வரைபை நிராகரித்து சமஸ்டியை முன்வைப்பது தொடர்பான கலந்துரையாடல் இன்று யாழ்ப்பாணம் இளஞ்கலைஞர் மண்டபத்தில் தமிழ்த் தேசியப் பேரவையின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

இது தொடர்பாக அரசியல் தரப்புகளும் சிவில் சமூக அமைப்புகளும் இணைந்து கலந்துரையாடி பொது இணக்கப்பாட்டிற்கு வருதல் அவசியமாகியுள்ள நிலையில், இது தொடர்பான கலந்துரையாடல் இன்று யாழ் இளங்கலைஞர் மண்டபத்தில் தமிழ்த் தேசியப் பேரவையின் ஏற்பாட்டில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

[08:20, 15.2.2026] அன்புமாறன்: ஏக்கியராஜ்ய அரசியலமைப்பை நிராகரிப்பது தொடர்பிலும் தமிழ்த்தேசம், இறைமை, சுயநிர்ணயத்தை அங்கீகரிக்கும் தீர்வை கோருவது தொடர்பிலும் , இவற்றை மக்கள் மயப்படுத்துவது தொடர்பிலும், தமிழ்த் தேசிய பேரவையின் ஏற்பாட்டில் கலந்துரையாடல் இன்று இடம்பெற்றுள்ளது.
இன்று காலை 10.30 மணிக்கு யாழ்ப்பாணம் சட்டநாதர் கோவில் வீதியில் அமைந்துள்ள இளங்கலைஞர் மன்றத்தில் நடைபெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடலில் அரசியல் கட்சி தலைவர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், சிவில் சமூக அமைப்பின் பிரதிநிதிகள் என பலநூற்றுக்கணக்கான பிரதிநிதிகள் பங்குபற்றி கருத்துக்களை பகிர்ந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.