கற்றல் உதவி வழங்கல் – யேர்மனி அகரம் அமைப்பு-14-02-2026 மட்டக்களப்பு மாவட்டம்.

26 0

மட்டக்களப்பு மாவட்டத்தின் சுரணையடியூற்று, களுவாஞ்சிக்குடி, கொக்கட்டிச்சோலை, உதயமூலை, பெரியமுணைக்காடு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மாணவர்களில் கடந்த மாதங்களில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தால் மழை வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்து வீட்டு தளபாடங்கள் பாடசாலை உபகரணங்கள் அனைத்தும் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ள வறுமைக்குட்பட்ட 140 மாணவர்களுக்கு 14/02/2026 அன்று யேர்மனி மத்திய மாநிலம்-2ல் வாழும் தாயக உறவுகளின் பேராதரவில் அகரம் நிறுவனத்தினால் கல்வி ஊக்குவிப்பு செயற்திட்டத்தின் கீழ் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது.

இதில் பொத்தகப்பை, கொப்பி, கணிதஉபகரணப்பெட்டி, பென்சில், பேனா, அழிறப்பர் என்பன வழங்கிவைக்கப்பட்டது.  இவற்றை வழங்கிவைத்த யேர்மன் மத்திய மாநிலம்-2ல் வாழும் தமிழ்மக்களுக்கு மட்டக்களப்பு வாழ் மாணவர்களும் பெற்றோர்களும் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொண்டனர்.