
ஆப்கானிஸ்தானின் கிழக்கு நகரமான கொஸ்ட் பகுதியில் இடம்பெற்ற கார் குண்டுத் தாக்குதலில் 18 பேர் பலியாகினர்.
ஆப்கானிஸ்தானிய அரச தகவல்கள் இதனை தெரிவிக்கின்றன.
ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டுள்ள அமெரிக்க பாதுகாப்பு முகாம் பகுதியில் பாதுகாப்பில் ஈடுபட்டுவருகின்ற ஆப்கானிஸ்தானிய காவல்துறையின் கட்டுப்பாட்டு பகுதியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மைதானம் ஒன்றையும் பேருந்து நிலையம் ஒன்றையும் அண்டிய சன நெரிசலான பகுதியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தாக்குதலில் படுகாயமடைந்த இரண்டு சிறார்கள் உட்பட்ட பத்து பேர் தொடர்ந்தும் சிகிச்சைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தாக்குதலை தலிபான்கள் நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
ரமழான் மாதத்தின் முதலாவது நோன்பு நாளில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

