இலங்கையில் இயற்கை அனர்த்தம் – இந்திய பிரதமர் கவலை

363 0

இயற்கை அனர்த்தம் காரணமாக இலங்கையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கவலை வெளியிட்டுள்ளார்.

டுவிட்டர் வலைத்தளத்தின் ஊடாக அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கும் இந்தியாவின் கப்பல்கள் இரண்டுஇலங்கையை வந்தடைந்துள்ளன.

குறித்த கப்பல்கள் இலங்கையில் தரித்திருந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் பணிகளை முன்னெடுக்கவுள்ளன.

இதேவேளை, அனர்த்த பாதிப்புக்களுக்காக இலங்கைக்கு நிவாரணங்களை வழங்கும் பணிகளுக்கு தொடர்ச்சியாக ஆதரவளிக்க தயாராக உள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.