சீரற்ற காலநிலை – 3 லட்சத்து 36 ஆயிரம் மின் இணைப்புகள் துண்டிப்பு

328 0

சீரற்ற காலநிலை காரணமாக சுமார் 3 லட்சத்து 36 ஆயிரத்திற்கும் அதிகமான மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மின்சக்தி மற்றும் சக்தி வலு அமைச்சு இதனை குறிப்பிட்டுள்ளது.

மின்சார துண்டிப்பு தொடர்பில் இலங்கை மின்சார சபையின் 1987, இலங்கை தனியார் மின்சார நிறுவனத்தின் 1910 அல்லது 1901 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து தெரியப்படுத்துமாறு அமைச்சின் ஊடக பேச்சாளர் சுலக்ஸன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

மாத்தறை, காலி, களுத்துறை, கேகாலை, இரத்தினபுரி மற்றும் கொழும்பின் பல பாகங்களில் மின்விநியோக தடை குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

அதுபோல் பாதுகாப்பு கருதி பல இடங்களில் மின்சார துண்டிப்பு செய்யப்பட்டள்ளன.

அனர்த்தங்களை குறைக்கும் வகையிலேயே இவ்வாறு மேற்கொள்ளப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும் சிறப்பு பணிகளின் மூலம் மின்சார பாவனையை வழமைக்கு கொண்டுவர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.