தேசிய இளைஞர் தினம் முல்லைத்தீவில் (காணொளி)

268 0

தேசிய கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகள் அமைச்சின் கீழ் இயங்கி வருகின்ற தேசிய இளைஞர் மன்ற முல்லைத்தீவு மாவட்ட காரியாலயம் ஏற்ப்பாடு செய்த தேசிய இளைஞர் தின நிகழ்வுகள் நேற்றைய தினம் முல்லைத்தீவில் சிறப்புற நடைபெற்றன.

தூய்மையான இலங்கைக்கு இளைஞர்களின் குரல் என்ற தொனிப்பொருளில் இன்று காலை முல்லைத்தீவு நகர்ப்பகுதியில் இருந்து ஆரம்பமான விழிப்புணர்வு ஊர்வலம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் அலுவலகம் வரை ஊர்வலம் நடைபெற்றது.

இதன் போது சூழல் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு சுவரொட்டிகளை ஒட்டியதோடு வாகனங்களிலும் அது தொடர்பான ஸ்ரிக்கர்களை ஒட்டியவாறு குறித்த பேரணி முல்லைத்தீவு இலங்கை செஞ்சிலுவைச் சங்க மண்டபத்தை சென்றடைந்தது.

அங்கே அரங்க நிகழ்வுகள் நடைபெற்றதோடு, இரத்த தான நிகழ்வுகளும் நடைபெற்றன.

இதன்போது முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் இரத்த வங்கியினர் வருகை தந்து இரத்தம் சேகரிக்கும் நடவடிக்கையை மேற்கொண்டனர்.

நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்டத்தினுடைய உதவி மாவட்ட செயலாளர் செல்வி லதுமீரா மற்றும் தேசிய இளைஞர் மன்றத்தினுடைய மகரகம தேசிய காரியாலயத்தினுடைய உதவி பணிப்பாளர், மற்றும் தேசிய இளைஞர் சேவை மன்றத்தினுடைய முல்லைத்தீவு மாவட்டத்தினுடைய உதவி பணிப்பாளர், மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி உட்பட்ட அதிதிகள் பலரும்  இளைஞர்கள் பலரும் கலந்துகொண்டனர்.