திருகோணமலையில், டைனமைட் உள்ளிட்ட நாசத்தை உண்டாக்கும் மீன்பிடி சாதனங்களை நிறுத்தக்கோரி கவனயீர்ப்பு போராட்டம்(காணொளி)

296 0

 

அகில இலங்கை பொது மீனவர் சம்மேளனத்தின் ஏற்பாட்டில், டனமைட் உள்ளிட்ட நாசத்தை உண்டாக்கும் மீன்பிடி சாதனங்களை நிறுத்தக்கோரி எதிர்ப்பு மகஜரில் கையொப்பமிடுதல் மற்றும் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று காலை திருகோணமலை நகர மணிக்கூடு கோபுரத்திற்கு அருகாமையில் இடம்பெற்றது.

திருகோணமலையில் மீன்பிடித்தொழிலில் தடை செய்யப்பட்ட டைனமைட் எனப்படும் வெடிபொருளைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கையில் ஒரு சிலர் ஈடுபடுவதனால், மீன்பிடித் தொழிலினை தமது பிரதான வருமானமாகச் செய்யும் பெரும்பான்மையான மக்கள் பாதிக்கப்படுவதாகவும், மீன் வளங்கள் அழிக்கப்படுவதாகவும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் மீன்பிடித் தொழிலை நிரந்தரமாகப் பாதிக்கும் டைனமைட் உள்ளிட்ட மீன்பிடி சாதனங்களை உடனடியாக நிறுத்தி மீன்பிடித் தொழிலை பாதுகாக்க வேண்டியது பொறுப்புக்கூற வேண்டியவர்களின் கடமையாகும் எனவும் இந்த அழிவை உண்டு பண்ணும் சாதனங்கள் தொடர்பாக மீனவர்களுக்கு அறிவூட்டி, பாதுகாக்கும் சாதனங்களை அறிமுகப்படுத்தி, மீன்பிடிக்கைத் தொழிலைப் பாதுகாக்கும் கடமையினை பொறுப்பதிகாரிகள் முன்னெடுக்க வேண்டும் எனவும் டைனமைட் உள்ளிட்ட நாசத்தை உண்டாக்கும் சாதனங்களை நிறுத்துவதற்கு உடனடியாகத் தலையிட வேண்டுமெனும் கோரிக்கை விடுத்து குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது குறித்த கோரிக்கைகள் அடங்கிய எதிர்ப்பு மகஜரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களால் கையொப்பமும் இடப்பட்டுள்ளது.

https://youtu.be/abY0TB9-jP0