கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக தொடர்ச்சியாக வவுனியா குளத்தினை நம்பி மீன்படியில் ஈடுபட்டு வருகின்ற 25 நன்னீர் மீன்பிடிப்;பாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.
கடந்த சில மாதமாக நாட்டில் வரட்சியான காலநிலை நிலவுவதன் காரணமாக மீன்களின் இனப்பெருக்கம் தடுக்கப்படுவதுடன், மீன்கள் நீரின்றி இறக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இதனால் இக்குளத்தினை நம்பி தமது தொழிலினை செய்து வருகின்ற மீனவர்களின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது.
தற்போது 25 மீனவர்கள் மட்டுமே மீன்படியில் ஈடுபடுவதாகவும் தற்போது 01 கிலோ முதல் 05 கிலோ என்ற ரீதியிலேயே மீன் பிடிப்பதாகவும் மீPனவர்கள் தெரிவிக்கின்றனர்.
தங்களிடம் இருந்து மொத்த வியாபாரிகள் கிலோ 350 ரூபா படி கொள்வனவு செய்வதாகவும் இதன் மூலம் நாள் ஒன்றுக்கு 600 ரூபா முதல் 1000 ரூபா வரைதான் வருமானம் ஈட்ட முடிவதாகவும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் நெடுங்குளம் போன்ற சிங்கள கிராமங்களில் இருந்து சிங்களவர்கள் சிலருக்கும் அனுமதி கொடுப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் குறித்த மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இதனால் தங்களின் நிலை கேள்விக்குறியாகிவிடும் எனவும் அவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்

