ஐந்து வருடங்களின் பின்னர் வவுனியா காட்டுப்பகுதியில் அதிக பாலைப்பழங்கள் (காணொளி)

460 0

 

கடந்த ஐந்து வருடங்களின் முன்னர்; வவுனியாவின் காட்டுப்பகுதிகளில்; அதிகளவு பாலைப்;பழம் பழுத்திருந்து.

அவற்றை பறித்து அதிகளவு விலைக்கு விற்பனை செய்து வந்த மக்கள் மீண்டும் ஐந்து வருடங்களுக்கு பின் வவுனியாவின் காட்டுப்பகுதிகளில் பாலைமரங்களில் அதிகமாக பழம் காணப்படுவதனால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இப்பகுதி மக்களும், வெவ்வேறு பகுதிகளிலிருந்து வரும் மக்களும், வயது வித்தியாசம் இன்றி ஆர்வத்துடன் காட்டுப்பகுதிகளில் பாலைப்பழம் பறிப்பதை காணக்கூடியதாகவுள்ளது.

பல ஆண்டுகளுக்கு பின் மக்கள் ஆர்வர்த்துடன் தேடிப் பறித்து விற்பனை செய்து வருவதையும் காணக்கூடியதாகவுள்ளது. பாலைப்பழங்கள் ஒரு சுண்டு 50 – 70 ரூபா வரை விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.